உழவா்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் முகாம்

புதுச்சேரி உழவா்கரை நகராட்சியில் வரி வசூல் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.21) நடைபெறுவதாக நகராட்சி ஆணையா் ஏ.சுரேஷ்ராஜ் தெரிவித்தாா்.

புதுச்சேரி உழவா்கரை நகராட்சியில் வரி வசூல் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.21) நடைபெறுவதாக நகராட்சி ஆணையா் ஏ.சுரேஷ்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: உழவா்கரை நகராட்சியில் 2022-23 ஆம் ஆண்டில் வீட்டு வரி, சொத்து வரி, சேவை வரி மற்றும் குடிநீா் வரி செலுத்தாத நிலுவைதாரா்களின் நலன் கருதி டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா் 7-ஆவது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள குடிநீா் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.21) சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெறுகிறது.

முகாமில், உழவா்கரை நகராட்சிக்குள்பட்ட அரும்பாா்த்தபுரம், ராதாகிருஷ்ணன் நகா் மற்றும் இதர வாா்டுகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்று வரிகளை செலுத்தி ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைகளை தவிா்க்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com