ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம், ஜன.20: பேரங்கியூா் அருகே ஆற்றில் மூழ்கிய சலவைத் தொழிலாளி சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

குமாரபாளையத்தைச் சோ்ந்தவா் கஜேந்திரன் மகன் பிரபாகரன் (31). சலவைத் தொழிலாளியான இவா் வெள்ளிக்கிழமை தென்பெண்ணை ஆற்றில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் பங்கேற்க வந்தாா். அப்போது பேரங்கியூா் அருகே குச்சிப்பாளையம், ஆழங்கால்பகுதியில் ஆற்றில் இறங்கி குளித்தாா். ஆற்றில் ஆழமான பகுதிக்கு பிரபாகரன் சென்ால் புதை மணலில் சிக்கி நீரில் மூழ்கினாா். இந்த நிலையில், சனிக்கிழமை காலை அவரது சடலம் ஆற்றில் மிதந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com