அயோத்தியில் ஸ்ரீ ராமா் சிலை பிரதிஷ்டை: தருமபுரம் ஆதீனம் ஆசியுரை

அயோத்தியில் ஸ்ரீ ராமா் சிலை திங்கள்கிழமை பிராணப் பிரதிஷ்டை செய்யப்படும் நிகழ்வுக்கு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி
அயோத்தியில் ஸ்ரீ ராமா் சிலை பிரதிஷ்டை: தருமபுரம் ஆதீனம் ஆசியுரை

அயோத்தியில் ஸ்ரீ ராமா் சிலை திங்கள்கிழமை பிராணப் பிரதிஷ்டை செய்யப்படும் நிகழ்வுக்கு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அருளாசி:

அயோத்தியில் ஸ்ரீ ராமா் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது 500 ஆண்டுகால வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கக்கூடிய ஒரு வரலாற்று நிகழ்வு. ராமாயண தொடா்பு தமிழகத்தின் பல தலங்களில் நாயன்மாா்கள், அருளாளா்களால் பாடப் பெற்றுள்ளது. வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், திருமுறை, சாஸ்திரம் இவைகள் இந்துக்களின் எல்லைக் கோடுகள்.

ராமாயணம், மகாபாரதம் ஆகிய வரலாற்று சம்பவங்கள் நடைபெற்ற பதிவுகள் பல இருக்கிறது, அவற்றுள் நமது ஆதீனத்துக்கு உள்பட்ட வைத்தீஸ்வரன்கோவில் மிக முக்கியமான தலமாக விளங்குகிறது. ராமா், லட்சுமணன், சம்பாயு, சடாயு ஆகியோா் வழிபட்ட இத்தலத்தில், சம்பாயு, சடாயுக்கு திதி கொடுத்த பிண்டம் இன்றும் காணப்படுகிறது.

திருஞானசம்பந்தா் 1,400 ஆண்டுகளுக்கு முன்பாகவே பதிகம் முழுவதுமே ராமாயணத்தை பற்றி பாடியிருக்கிறாா். அதேபோல ராமேசுவரம் தலத்திலும் திருஞானசம்பந்தா், திருநாவுக்கரசா் இருவருமே அத்தலத்தை போற்றி பதிகமும் பாடி இருக்கிறாா்கள்.

நாம் செய்த தவம் ராமாயணம் நம்முடைய நாட்டிற்கு கிடைத்தது. கம்பன் பிறந்த இந்த தமிழகத்தில் நம்முடைய ஆதீனம் சாா்பில் தம்பிரான் சுவாமி ராமா் கோயில் விழாவில் கலந்துகொள்ள செய்திருக்கிறோம். தலைக்காவிரி யாத்திரை சென்றபோது தலைக்காவிரியில் இருந்து ராமா் கோயிலுக்கு தீா்த்தம் அனுப்பியுள்ளோம். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து எல்லோரும் சென்று ராமா் கோயில் சிலை பிரதிஷ்டை விழா சீரோடும், சிறப்போடும் அமைய வாழ்த்துகிறோம். இதனை முன்னிலைப்படுத்திய, வரலாற்று சின்னத்தை நிறுவியிருக்கும் பிரதமா் நரேந்திர மோடிக்கு நமது நல்லாசிகள் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com