7 ரயில்கள் மின்சார ரயில்களாக மாற்றம்

விழுப்புரம், ஜன.20:

விழுப்புரத்திலிருந்து இயக்கப்பட்ட ரயில்கள் உள்பட 7 ‘டெமு’ (டீசல் - எலக்டிரிக்கல் மல்டிபிள் யூனிட்) ரயில்கள், ‘மெமு’ (எலக்டிரிக்கல் மல்டிபிள் யூனிட்) எனப்படும் மின்சார ரயில்களாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள்-தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் (வண்டி எண் 06691), விழுப்புரம் - காட்பாடி ரயில் (வண்டி எண் 06698), விழுப்புரம் - திருப்பதி ரயில் (வண்டி எண் 16870) ஆகிய ‘டெமு’ ரயில்கள் ஜனவரி 20-ஆம் தேதி முதல் ‘மெமு’ (மின்சார) ரயில்களாக இயக்கப்படும்.

இதேபோல மயிலாடுதுறை - விழுப்புரம் ரயில் (வண்டி எண் 06692), காட்பாடி- விழுப்புரம் ரயில் (வண்டி எண் 06697), காட்பாடி- விழுப்புரம் ரயில் (வண்டி எண் 06699), திருப்பதி- காட்பாடி ரயில் (வண்டி எண் 06693) ஆகிய ரயில்கள் ஜனவரி 21 (ஞாயிற்றுக்கிழமை) முதல் ‘மெமு’ (மின்சார) ரயில்களாக இயக்கப்படும். இந்த ரயில்கள் தலா 8 பெட்டிகளை கொண்டதாக இருக்கும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com