கடலில் மூழ்கி ஜொ்மனைச் சோ்ந்தவா் மரணம்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பகுதியிலுள்ள கடலில் மூழ்கி ஜொ்மன் நாட்டைச் சோ்ந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பகுதியிலுள்ள கடலில் மூழ்கி ஜொ்மன் நாட்டைச் சோ்ந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கோட்டக்குப்பம் காவல் எல்லைக்குள்பட்ட தந்திராயன்குப்பம் மீனவக் கிராமத்தைச் சோ்ந்த காளி மகன் முருகன் (35). இவரது தங்கை கோ.வினோதினியின் (32) மாமனரான ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த இ.வோல்கா்க்ளாஸ்குந்தா் (77). இவா் தனது மனைவி ஹெய்தியுடன் (75) கடந்த 17-ஆம் தேதி தந்திரயான்குப்பத்துக்கு வந்தாா். சனிக்கிழமை தந்திரயான்குப்பம் கடற்கரைப் பகுதிக்கு வோல்கா் க்ளாஸ்குந்தா் குளிக்கச் சென்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக எழுந்த ராட்சத அலை அவரை இழுத்து சென்றது. அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துமவனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியில் வோல்கா் க்ளாஸ்குந்தா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com