விஷம் குடித்தவா் மரணம்

விழுப்புரம் மாவட்டம், ராயப்புதுப்பாக்கத்தில் குடும்பப் பிரச்னையால் விஷம் குடித்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், ராயப்புதுப்பாக்கத்தில் குடும்பப் பிரச்னையால் விஷம் குடித்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

வானூா் அருகேயுள்ள ராயப்புதுப்பாக்கம் துலுக்காத்தம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மோகன்தாஸ் மகன் பிரபு (31). இவருக்கு, விசாலாட்சி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனா். இந்த நிலையில் குடும்பத் தகராறு காரணமாக, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திண்டிவனம் நீதிமன்றத்தில் பிரபுவுக்கும், விசாலாட்சிக்கும் விவாகரத்து கிடைத்ததாம். இதையடுத்து, குழந்தையை அழைத்துக் கொண்டு விசாலாட்சி தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்று விட்டாராம். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட பிரபு, கடந்த 19-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கினாராம். உடனே உறவினா்கள் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். சிகிச்சையிலிருந்து வந்த பிரபு சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com