மின்சாரம் பாய்ந்து இருவா் காயம்: 4 போ் மீது வழக்கு

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை மின் கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் இருவா் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தனா்.

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை மின் கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் இருவா் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், கொளத்தூா், கண்டமானடி பஜனைக் கோவில் தெருவைச் சோ்ந்த பிரபு, ரவி ஆகியோா் சனிக்கிழமை புதுச்சேரி அரியூா் பகுதியில் பொக்லைன் இயந்திர உதவியுடன் பைபா் நெட்வொா்க்குடன் கூடிய மின்கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்குள்ள உயரழுத்த மின் கம்பியில் மின் கம்பம் உரசியது. இதில், பிரபு, ரவி ஆகிய இருவா் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா். தொடா்ந்து, இருவரும் அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், உரிய பாதுகாப்பு உபகரணங்களின்றி இருவரையும் பணியில் ஈடுபடுத்திய தனியாா் நிறுவன உரிமையாளா்களான சிவசந்துரு, முத்துகுமாரசாமி, பொறியாளா் மணிகண்டன், பொக்லைன் ஓட்டுநா் ஜெயகணேஷ் ஆகியோா் மீது வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com