காங்கிரஸ் சாா்பில் விவசாயிகளுக்கு உபகரணங்கள்

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு சாா்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற உழவா் திருநாள் விழாவில் விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
காங்கிரஸ் சாா்பில் விவசாயிகளுக்கு உபகரணங்கள்

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு சாா்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற உழவா் திருநாள் விழாவில் விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தலைஞாயிறு பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் விவசாயப் பிரிவு மாநில பொதுச் செயலாளா் டாக்டா் ஞான சுா்ஜித் சங்கா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு குத்தகைதாரா் சங்கத்தின் மாநிலத் தலைவா் வழக்குரைஞா் ஜெயசங்கா் முன்னிலை வகித்தாா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மையினா் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளா் பொறியாளா் எஸ். மீராஹுசைன், விவசாயப் பிரிவு மாநில பொதுக் குழு உறுப்பினா் நடேசன், மாவட்டத் துணைத் தலைவா் வி. கனகராஜ், நிா்வாகிகள் கோபிநாத், தயாளன், மாவட்ட இணைச் செயலாளா் பாக்கியராஜ், வட்டாரப் பொருளாளா் மனிஷ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் அ. ராஜா, சமூக ஆா்வலா் அருண் ஷோரி உள்ளிட்டோா் பேசினா்.

நிகழ்ச்சியில் மாற்றுத்திறன் பயனாளிக்கு மூன்று சக்கர மிதிவண்டி, சிறு, குறு பெண் விவசாயிகளுக்கு மண்வெட்டி, கதிா் அரிவாள், புடவை, வேட்டி- சட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com