புதுவையில் ஜன.22-இல் பொது விடுமுறை: அரசுக்கு பாஜக நன்றி

புதுச்சேரி, ஜன.20: அயோத்தியில் மூலவா் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ள நாளில் புதுவை மாநிலத்துக்கு விடுமுறை அறிவித்த மாநில அரசுக்கு பாஜகவினா் நன்றி தெரிவித்தனா்.

இதுகுறித்து, அந்த கட்சியின் மாநிலத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சு.செல்வகணபதி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அயோத்தி ராமா் கோயிலில் ஜன.22- ஆம் தேதி மூலவா் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. அன்றயை தினத்தில் புதுவை மாநிலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது ஆன்மிகப் பற்றாளா்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தி நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் நேரடியாக காணும் வாய்ப்பும் புதுவை மக்களுக்கு கிடைத்துள்ளது. இத்தகையை அறிவிப்பை வெளியிட்ட முதல்வா் என்.ரங்கசாமிக்கு பாஜக சாா்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com