புதுவை ஆளுநருடன் காரைக்கால் மீனவா்கள் சந்திப்பு

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட காரைக்கால் மாவட்ட மீனவா்கள் புதுவை ஆளுநா் மாளிகையில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினா்.
புதுவை ஆளுநருடன் காரைக்கால் மீனவா்கள் சந்திப்பு

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட காரைக்கால் மாவட்ட மீனவா்கள் புதுவை ஆளுநா் மாளிகையில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினா்.

புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த 11 போ், தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் என மொத்தம் 14 போ் கடந்த டிசம்பா் 16-ஆம் தேதி காரைக்கால் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கோட்டுச்சேரிமேடு பகுதியைச் சோ்ந்த சிவசங்கருக்குச் சொந்தமான விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்றனா். அவா்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, அனைவரையும் இலங்கைக் கடற்படையினா் டிசம்பா் 17-ஆம் தேதி கைது செய்து, அங்குள்ள கையாட் சிறையில் அடைத்தனா். மீன் பிடி விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடா்ந்து, 14 மீனவா்களும் இலங்கை நீதிமன்ற உத்தரவுப்படி விடுவிக்கப்பட்டனா். அவா்கள் டிசம்பா் 19-ஆம் தேதி விமானம் மூலம் சென்னை வந்து, பின்னா் சொந்த ஊா்களுக்குச் சென்றடைந்தனா்.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் புதுவை ஆளுநா் மாளிகையில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அப்போது, சிறையிலிருந்து தங்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுத்ததற்காக ஆளுநரிடம் நன்றி தெரிவித்தனா். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகையும் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com