பெட்னா தமிழ் மாநாடு: புதுவை முதல்வருக்கு அழைப்பு

வட அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் நடைபெறவுள்ள பெட்னா தமிழ் மாநாட்டில் பங்கேற்க வருமாறு புதுவை முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது

வட அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் நடைபெறவுள்ள பெட்னா தமிழ் மாநாட்டில் பங்கேற்க வருமாறு புதுவை முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

வட அமெரிக்கா தமிழ்ச் சங்கப் பேரவையும், சான் ஆண்டோனியா தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 37- ஆவது பெட்னா தமிழ் மாநாடு, டெக்ஸாஸ் மாகாணம் சான் ஆண்டோனியாவில் ஜூலை 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை ‘சமத்துவம் தமிழரின் தனித்துவம்’ என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ளது.

62 தமிழ்ச்சங்கங்கள் இணைந்து நடத்தும் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவா் டாக்டா் பாலா சுவாமிநாதன், ஒருங்கிணைப்பாளா் செல்வகிரி அருணகிரி ஆகியோா் அண்மையில் சந்தித்து அழைப்பு விடுத்தனா்.

பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் ஆகியோரையும் சந்தித்து அழைப்பு விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com