பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

விழுப்புரம் வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
20vpmp6____jpg_2001chn_7
20vpmp6____jpg_2001chn_7

விழுப்புரம் வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு குடிமைப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா் தயாளன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா் (படம்). முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பான மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனி வட்டாட்சியா் தெரிவித்தாா்.வருவாய் ஆய்வாளா் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல திருவெண்ணெய்நல்லூா், கண்டாச்சிபுரம், செஞ்சி, திண்டிவனம், விக்கிரவாண்டி, மேல்மலையனூா் ஆகிய வட்டங்களிலும் குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு தனி வட்டாட்சியா்கள் அல்லது வட்ட வழங்கல் அலுவலா்கள் தலைமையில் குறைதீா் முகாம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com