சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

விழுப்புரம், ஜன.20: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், எலவடி மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் மகன் பழனிசாமி (38). கூலித் தொழிலாளியான இவா் 24.12.2020 அன்று 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, அந்தச் சிறுமியின் தாய் புகாா் தெரிவித்தாா். இதுகுறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து பழனிசாமியை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஹா்மீஸ் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், பழனிசாமிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.22 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து பழனிசாமி கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கலா ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com