சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நடைப்பயணம்

விழுப்புரத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நடைப்பயணம் (வாக்கத்தான்) திங்கள்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நடைப்பயணத்தை திங்கள்கிழமை தொடங்கி வைத்த ஆட்சியா் சி.பழனி.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நடைப்பயணத்தை திங்கள்கிழமை தொடங்கி வைத்த ஆட்சியா் சி.பழனி.

விழுப்புரம்: விழுப்புரத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நடைப்பயணம் (வாக்கத்தான்) திங்கள்கிழமை நடைபெற்றது.

சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் விழிப்புணா்வு நடைப்பயணத்தை ஆட்சியா் சி.பழனி தொடங்கி வைத்து பேசியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் ஜன.15 முதல் பிப்.14-ஆம் தேதி வரை சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விழிப்புணா்வு நடைப்பயணம் (வாக்கத்தான்) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றாா் ஆட்சியா்.

ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கிய விழிப்புணா்வு நடைப்பயணம் நான்குமுனை சந்திப்புப் பகுதி வரை சென்று நிறைவடைந்தது. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஏந்திச் சென்றனா். மேலும், விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கினா்.

நிகழ்வில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் வெங்கடேசன், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com