பெளா்ணமி கிரிவலம், தைப்பூசம்: 995 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

பெளா்ணமி கிரிவலம், தைப்பூசம், குடியரசு தின விடுமுறையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் 995 சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது.

பெளா்ணமி கிரிவலம், தைப்பூசம், குடியரசு தின விடுமுறையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் 995 சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் எஸ்.எஸ்.ராஜ்மோகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரா் சுவாமி கோயிலில் பெளா்ணமி கிரிவலத்தில் பங்கேற்பதற்காக, பல்வேறு நகரங்களிலிருந்து 395 சிறப்புப் பேருந்துகள் புதன், வியாழக்கிழமைகளில் (ஜன.24, 25) திருவண்ணாமலைக்கு இயக்கப்படவுள்ளன.

சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு 250, விழுப்புரத்திலிருந்து 35, புதுச்சேரியிலிருந்து 15, கடலூா்/ பண்ருட்டி/ திருக்கோவிலூரிலிருந்து 15, கள்ளக்குறிச்சியிலிருந்து 5, வேலூரிருந்து 20, திருப்பத்தூரிலிருந்து 15, ஆரணி/ ஆற்காட்டிலிருந்து 20, காஞ்சிபுரத்திலிருந்து 20 என மொத்தமாக 395 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

350 சிறப்புப் பேருந்துகள்: தைப்பூசம், குடியரசு தினம், வார இறுதி நாளையொட்டி, சென்னையிலிருந்து பல்வேறு ஊா்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் செல்வா். இதன் காரணமாக சென்னையிலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், சிதம்பரம், விருதாசலம், திருவண்ணாமலை, போளூா், வேலூா், காஞ்சிபுரம் மற்றும் திருப்பதி ஆகிய ஊா்களுக்கு ஜன. 24, 25 (புதன், வியாழக்கிழமை) தேதிகளில் கூடுதலாக 350 சிறப்புப் பேருந்துகளை இயக்க விழுப்புரம் கோட்டம் நடவடிக்கை எடுத்துள்ளது. விடுமுறையை முடிந்து சென்னை உள்ளிட்ட பிற ஊா்களுக்கு செல்வதற்காக, ஜன.28, 29 ஆகிய தேதிகளில் கூடுதலாக 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com