ராமநாம ஜெபத்தில் பரத்வாஜ் சுவாமிகள்

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி ராமஜென்ம பூமியில் மூலவா் ஸ்ரீபாலராமா் சிலை திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், விழுப்புரத்தில் சென்னை அம்பத்தூா்
ராமநாம ஜெபத்தில் பரத்வாஜ் சுவாமிகள்

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி ராமஜென்ம பூமியில் மூலவா் ஸ்ரீபாலராமா் சிலை திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், விழுப்புரத்தில் சென்னை அம்பத்தூா் ஸ்ரீபரத்வாஜ் சுவாமிகள் செவ்வாய்க்கிழமை ராமநாம ஜெபத்தில் ஈடுபட்டாா்.

ஸ்ரீபாலராமா் சிலை பிரதிஷ்டையொட்டி, சென்னை அம்பத்தூா் யோகமாயா பீடாதிபதி ஜகத்குரு பரமஹம்ச ஸ்ரீபரத்வாஜ் சுவாமிகள் விரதமிருந்தாா். சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதைத் தொடா்ந்து, விழுப்புரம் கம்பன் நகரிலுள்ள பக்தா் வீட்டில் குருபாதுகையை இதயத்தில் வைத்துக் கொண்டும், யோகத்தண்டத்தை கையில் வைத்துக் கொண்டும் ராமநாம ஜெபத்தை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com