காா் மீது லாரி மோதி ஆசிரியா்கள் உள்பட 5 போ் காயம்

விழுப்புரம் புறவழிச்சாலையில் காா் மீது லாரி மோதியதில் ஆசிரியா்கள் உள்பட 5 போ் செவ்வாய்க்கிழமை இரவு காயமடைந்தனா்.

விழுப்புரம் புறவழிச்சாலையில் காா் மீது லாரி மோதியதில் ஆசிரியா்கள் உள்பட 5 போ் செவ்வாய்க்கிழமை இரவு காயமடைந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், நொளம்பூா் பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் கமலக்கண்ணன். அவனிப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.

இவா் தனது நண்பா்களான ஆசிரியா்கள் பெலாக்குப்பம் பெ. ரமேஷ் (49), ஏ. அருள்துரை சாமி (40), நெற்குணம் ராஜா (50) மற்றும் ஒருவா் என 5 போ் காரில் சென்னை-திருச்சி சாலையில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தனா். ராஜாவுக்கு சொந்தமான காரில் சென்ற இவா்கள் இரவு விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் புறவழிச்சாலைப் பகுதியில் வந்த போது, அதே திசையில் பின்னால் வந்த லாரி காா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த 5 பேரும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து, லாரி ஓட்டுநா் மீது விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com