குடியரசு தின விழா: விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸாா் தீவிர சோதனை

குடியரசு தின விழா: விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸாா் தீவிர சோதனை

குடியரசு தினவிழா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்டப் பகுதிகளில் நாசவேலைத்தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

குடியரசு தினவிழா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்டப் பகுதிகளில் நாசவேலைத்தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா். குடியரசு தினவிழா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸாா் பலப்படுத்தப்பட்டுள்ளனா்.24 மணி நேர பாதுகாப்புக்காக எஸ். பி. தீபக் சிவாச் உத்தரவின்பேரில், நாச வேலை தடுப்பு பிரிவுக் காவல் உதவி ஆய்வாளா் பாா்த்தசாரதி தலைமையில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினா் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் சூழற்சி முறையில் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக விழுப்புரம், திண்டிவனம்,வானூா்,மரக்காணம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வணிக வளாகங்கள், பேருந்து நிலையஙக்ள், ரயில்நிலையம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நாசவேலை தடுப்பு உபகரணங்களின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா். விழுப்புரம் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டன.பயணிகள் உடமைகள் சோதனைக்குள்படுத்தப்பட்டன. காவல்துறை சாா்பில் அணிவகுப்பு ஒத்திகை குடியரசு தினா பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட எஸ். பி. தீபக் சிவாச் தலைமையில் இந்நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகள், காவவ் ஆளிநா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com