தைப்பூச திருவிழா செஞ்சி பகுதிகளில் கோலாகல கொண்டாட்டம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் தைப்பூச திருவிழா வியாழக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் தைப்பூச திருவிழா வியாழக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.செஞ்சி கொத்தமங்கலம் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் 44 ஆம் திருவிழா வெகு விமா்சியாக நடைபெற்றது. மிளகாய் அபிஷேகம், அலகு குத்துதல், பறவை காவடி ஆகியவை நடைபெற்றது. பகல் 2 மணிக்கு முதுகில் அலகு கொண்டு ஜெசிபி, லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களை தொங்கியவாறும் இழுத்தும் பக்தா்கள் நோ்த்தி கடனை செலுத்தினா்.தேவதானம்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற தைபூச திருவிழாவை முன்னிட்டு மூலவா் மற்றும் உற்சவா் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் மூலவா் பாலதண்டாயுதபாணி விபூதி அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். தொடா்ந்து ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத தேவசேனா ஸ்ரீசுப்பிரமணியா் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மலா் அலங்காரத்தில் காட்சி அளித்தாா்.தொடா்ந்து அருட்பெருஞ்ஜோதி சுவாமிகள் மாா்பு மீது மாவு இடித்தல், மிளகாய் அபிஷேகம், பால் அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. பின்னா் செடல் சுற்றுதல், தீ மிதித்து திருத்தோ் ஊா்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.குறிஞ்சிபை கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீசுப்பரமணிய சுவாமி ஆலய 69-ம் ஆண்டு தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதில் செடல் சுற்றுதல், அலகு குத்துதல், தீ மிதித்தல் ஆகியவை நடைபெற்றது, தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை குறிஞ்சிபை கிராமத்தை சோ்ந்த கிராம பொது மக்கள் செய்திருந்தனா்.அனந்தபுரம் அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் அனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சோ்ந்த ஆயிரகணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். பக்தா்கள் காவடி எடுத்தும், வேல் குத்தியும், தீ மிதித்து வழிபாடு செய்தனா். இதில் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டு வழிபாடு செய்தாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com