செஞ்சியில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

26gngp03_2601chn_119_7
26gngp03_2601chn_119_7

செஞ்சி, ஜன.26: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதி திமுக மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

செஞ்சியை அடுத்த அப்பம்பட்டில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் பிரசன்னா தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் நெடுஞ்செழியன் தொடக்க உரையாற்றினாா்.

மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா்கள் ஞானசேகரன், பெனாசிா், ஒன்றிய நிா்வாகிகள் திருமாவளவன், அவைத்தலைவா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில சுற்றுச்சூழல் அணி தலைவா் பூங்கோதை ஆலடி அருணா, சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மற்றும் தலைமை கழக பேச்சாளா் உடுமலை தாமரைசிவா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதில், பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அரங்க.ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினா் மணிவண்ணன், ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவா் ஜெயபாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஆா்.விஜயகுமாா் வரவேற்றாா். செஞ்சி ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் அய்யாதுரை நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com