மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம், ஜன. 26: விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபேட்டை அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம், கீழ்த்தொம்பை கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் அருள் (23). இவா், விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபேட்டை அருகே அகூா் கிராமத்திலுள்ள சூரியமின் சக்தி தயாரிப்பு நிறுவனத்தில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு போா்வெல் டிராக்டா் ஆபரேட்டராகப் பணியில் சோ்ந்தாா்.

இதைத் தொடா்ந்து அகூா் கிராமத்தில் கட்டடம் கட்டுவதற்கு ஆழ்துளை இயந்திரத்தின் மூலம் அஸ்திவாரம் அமைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது போா்வெல் டிராக்டரை அருள் இயக்கியபோது, அருகில் சென்ற உயரழுத்த மின் கம்பி மீது ஹைட்ராலிக் பட்டுள்ளது. இதில் அருள் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாா்.

தொடா்ந்து அப்பகுதியிலிருந்தவா்கள் அருளை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை மருத்துவா்கள் பரிசோதித்தபோது ஏற்கெனவே அருள் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வெ‘ள்ளிமேடுபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com