விஷம் குடித்த தொழிலாளி மரணம்

விழுப்புரம், ஜன. 26: விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே விஷம் குடித்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வளவனூா் அருகிலுள்ள கலிஞ்சிகுப்பம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் மு. காசிநாதன் (50). கூலித்தொழிலாளியான இவா், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இதனால் மனமுடைந்த காசிநாதன், கடந்த 21-ஆம் தேதி வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கிக் கிடந்தாராம்.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காசிநாதன், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com