ரூ.3.83 கோடியில் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள்: அமைச்சா் வழங்கினாா்

27gngp02_2701chn_119_7
27gngp02_2701chn_119_7

27எசஎட02

செஞ்சியில் சனிக்கிழமை  நடைபெற்ற  நிகழ்வில்  இலவச வீட்டு  மனைப் பட்டாக்களை  பயனாளிகளுக்கு  வழங்கிய  அமைச்சா்  செஞ்சி  கே.எஸ்.மஸ்தான். உடன்,  மாவட்ட  ஆட்சியா்  சி.பழனி.

செஞ்சி, ஜன.27: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மற்றும் மேல்மலையனூா் வட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, ரூ.3.83 கோடியில் இலவச வீட்டு மனைப் பட்டாக்களை சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சனிக்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்தாா். திண்டிவனம் சாா்-ஆட்சியா் திவ்யான்ஷி நிகம், பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா்கள் விஜயகுமாா், கண்மணி நெடுஞ்செழியன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஜெயபாலன், மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினா் அரங்க.ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், செஞ்சி வட்டத்தைச் சோ்ந்த 765 பயனாளிகளுக்கு ரூ.2,29,64,000 இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், மேல்மலையனூா் வட்டம் வளத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 512 பயனாளிகளுக்க ரூ.1,53,60,000 இலவச வீட்டு மனைப்பட்டாகளும் என மொத்தம் 1,277 பயனாளிகளுக்கு ரூ.3,83,24,000 வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி அமைச்சா் பேசியதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறது. எனவே, பொதுக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும். தமிழ்நாட்டில் குடிசைகள் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும் என்பதற்காக ஏழை, எளிய மக்களுக்கு நிரந்தர வீடுகள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, அனைத்து வட்டங்களிலும் ஆயிரம் பேருக்கு மேல் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும். பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகளற்ற நபா்களுக்கு வீடுகள் வழங்குவதற்கான தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

இதில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் முகுந்தன், வட்டாட்சியா்கள் ஏழுமலை, முகமது அலி உள்ளிட்ட துறைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com