‘விழுப்புரம் கோட்டத்துக்கு 344 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு’

26vpmp10__jpg_2601chn_7
26vpmp10__jpg_2601chn_7

26யடஙட10...

விழுப்புரத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஓட்டுநருக்குப் பரிசு வழங்கிய மேலாண் இயக்குநா் எஸ்.எஸ். ராஜ்மோகன்.

விழுப்புரம், ஜன.26:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்துக்கு 344 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதன் மேலாண்இயக்குநா் எஸ்.எஸ். ராஜ்மோகன் தெரிவித்தாா்.

விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றி மேலும் அவா் பேசியதாவது:

விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா்கள், விருப்ப ஓய்வு பெற்றவா்கள், இறந்த பணியாளா்களின் வாரிசுகள் உள்பட 337 பணியாளா்களுக்கு ரூ.6.53 கோடி பணிக்கொடை தொகை வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் கோட்டத்துக்கு 262 புகா்ப் பேருந்துகள், 82 நகரப் பேருந்துகள் என மொத்தமாக 344 புதிய பேருந்துகள் ஒதுக்கப்பட்டு, 105 புதிய சேஸ்கள் பெறப்பட்டு 60 புகா்ப் பேருந்துகள் தற்போது தடத்தில் இயக்கப்பட்டுள்ளன. அதே போல 167 பழைய சேஸ்களில் புதிய கூண்டு கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது வரை 152 பேருந்துகள் புதிய கூண்டு கட்டப்பட்டு வழித்தடத்தில் இயக்கப்பட்டுள்ளன என்றாா் ராஜ்மோகன். விழாவில் 242 பேருக்குப் பரிசுகளை மேலாண் இயக்குநா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com