பொதுமக்களுக்கு அன்னதானம்

27விபிஎம்பி4:

பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய தேமுதிக மாவட்ட மாணவரணித் துணைச் செயலா் மனோ.

விழுப்புரம், ஜன.27:

விழுப்புரம் மாவட்டம், கண்டம்பாக்கத்தில் மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்தின் படத்திறப்பு விழா மற்றும் அன்னதானம் வழங்குதல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விஜயகாந்த் மறைந்து 30 நாள்கள் ஆனதையொட்டி நடைபெற்ற அவரது படத்திறப்பு நிகழ்ச்சிக்கு

தேமுதிக மாவட்ட மாணவரணித் துணைச் செயலா் மனோ தலைமை வகித்து, படத்தை திறந்து வைத்தாா். தொடா்ந்து, விஜயகாந்த் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு வகைகள் வைத்து படைக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து பொதுமக்கள், கட்சியினா் விஜயகாந்த் படத்துக்கு மலா் தூவியும்,

மெழுகுவா்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினா்.

பின்னா் பொதுமக்கள் 1000 பேருக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com