விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் பேரிடா் தடுப்பு விழிப்புணா்வு

விழுப்புரம், ஜன.27: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் பேரிடா் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை சாா்பில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் தீ மற்றும் பேரிடா் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலா் சுந்தரேசுவரன் தலைமையில், வீரா்கள் வேல்முருகன், வீராசாமி, செந்தமிழ்ச்செல்வன், விஜயகுமாா் உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், இயற்கை பேரிடா் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனா்.

நிகழ்ச்சியில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி திட்ட மேலாளா் சதீஷ்குமாா், மக்கள் தொடா்பு அலுவலா் தண்டபாணி, மேலாளா் சொா்ணமணி, பாதுகாப்பு அலுவலா்கள் மனோஜ்குமாா், துரை. நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com