ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில்‘லாட் டோக்கன்’ முறை அமல்

விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூா், செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் ‘லாட் டோக்கன்’ முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூா், செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் ‘லாட் டோக்கன்’ முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூா், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு தற்போது நெல்வரத்து அதிகளவில் உள்ளது. இடப்பற்றாக்குறை காரணமாக திருவெண்ணெய்நல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சாலையிலேயே நெல்லைக் கொட்டி, பரிவா்த்தனைக்கு வைக்கின்றனா். விவசாயிகள் தங்கள் விளை பொருளுக்கு அதிக விலை கிடைக்கப்பெறுவதால் செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்துக்கு, செஞ்சி சுற்றுவட்டாரப் பகுதி மட்டுமல்லாது, வெளி மாவட்டங்களிலிருந்தும் நெல் வரத்து அதிகளவில் உள்ளது. இதனால், இரு விற்பனைக் கூடங்களிலும் அன்றாடப் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டு, விவசாயிகள் சிரமத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.

எனவே, இதை சரிசெய்யும் பொருட்டு, ‘லாட் டோக்கன்’ முறை அமல்படுத்தப்படவுள்ளது. இந்த இரு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தினமும் விவசாயிகளுக்கு அடுத்து வரும் தேதிகளுக்கான ‘லாட் டோக்கன்’ (தேதி குறிப்பிட்டு) வழங்கப்படும். ‘லாட் டோக்கன்’ பெற்ற விவசாயிகளுக்கு மட்டும் அந்த தேதியில் லாட் எண் வழங்கப்படும்.

இதனால் விளைபொருள்கள் சேதமடைவதை தவிா்ப்பதுடன், விளைபொருள் பரிவா்த்தனை சேவைகளை அவா்களுக்கு எந்தவித காலவிரயம், சிரமமின்றி செயல்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com