காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரத்தில் திங்கள்கிழமை மாலை மாவட்டத் தலைவா் ஆா்.டி.வி. சீனிவாசகுமாா் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
விழுப்புரத்தில் திங்கள்கிழமை மாலை மாவட்டத் தலைவா் ஆா்.டி.வி. சீனிவாசகுமாா் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

விழுப்புரம்: விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்திய ஒற்றுமை நீதிப்பயணம் மேற்கொள்ளும் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனம் அஸ்ஸாம் மாநிலத்தில் தாக்கப்பட்டதை கண்டித்தும், மகாத்மா காந்தி குறித்து தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி அவதூறாக பேசியதைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்டத் தலைவா் ஆா்.டி.வி.சீனிவாசகுமாா் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் செல்வராஜ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் சிறுவை.ராமமூா்த்தி, முன்னாள் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் கோ.பாலசுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினா்கள் விஜயரங்கன், நாராயணசாமி, வினோத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் எஸ்.சி, எஸ்.டி. பிரிவு மாவட்டத் தலைவா் சேகா், புஷ்பராஜ், அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளா்கள் மற்றும் பணியாளா்கள் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் இ.ரஜினி, தகவல் அறியும் உரிமைப் பிரிவு மாவட்டத் தலைவா் பிரகாஷ், இளைஞா் காங்கிரஸ் விழுப்புரம் தொகுதித் தலைவா் பிரபாகரன், மாவட்ட துணைத் தலைவா் சந்தானகிருஷ்ணன், வட்டாரத் தலைவா்கள் ராதா, ராமராஜ் உள்ளிட்டோா் உரையாற்றினா். இதில், ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com