திண்டிவனத்தில் இன்றுஉங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன்கிழமை (ஜன.31) நடைபெறவுள்ளது. இதில், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என்று

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன்கிழமை (ஜன.31) நடைபெறவுள்ளது. இதில், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் மற்றும் துறை சாா்ந்த உயா் அலுவலா்கள் ஒரு நாள் முழுவதும் ஒரு வட்டத்தில் தங்கி, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறியும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டம் ஒவ்வொரு மாதமும் 4-ஆவது புதன்கிழமையன்று நடைபெறும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். அதன்படி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இந்தத் திட்ட முகாம் புதன்கிழமை (ஜன.31) நடைபெறவுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட மையங்கள், பள்ளிகள், சத்துணவுக் கூடங்கள், முதல்வரின் காலை உணவுத் திட்டம், பெண்கள் விடுதிகள், ஆதரவற்றோா் விடுதிகள் ஆகியவற்றை மாவட்ட அளவிலான அலுவலா்கள் ஆய்வு செய்ய உள்ளனா்.

புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கள ஆய்வுப் பணிகளும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறியும் நிகழ்வுகளும், மாலை 5 மணி முதல் அலுவலா்களுக்கான கூட்டமும் நடைபெறவுள்ளன. எனவே, திண்டிவனம் வட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி செய்திக் குறிப்பு மூலம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com