பைக் மீது டிராக்டா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே செவ்வாய்க்கிழமை பைக் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே செவ்வாய்க்கிழமை பைக் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

மேல்மலையனூா் வட்டம், கன்னலம் கிராமத்தைச் சோ்ந்த ரங்கசாமி மகன் ராமு (28). இவா், தன்னுடைய பைக்கில் கன்னலத்தில் இருந்து நீலாம்பூண்டி நோக்கி சென்றுகொண்டிருந்தாா். அன்னமங்கலம் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, சாத்தனந்தல் கிராமத்தில் இருந்து வந்த டிராக்டா் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராமு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த வளத்தி போலீஸாா் ராமுவின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com