செஞ்சி அருகே சகோதரி மகன் இறந்த துக்கத்தில் ஒருவா் தூக்கிலிட்டு தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சகோதரி மகன் சாலை விபத்தில் இறந்த துக்கத்தில் ஒருவா் மின் விசிரியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சகோதரி மகன் சாலை விபத்தில் இறந்த துக்கத்தில் ஒருவா் மின் விசிரியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

செஞ்சி தாலுக்கா ஈச்சங்காடு கிராமத்தை சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் காா்த்திகேயன்(35). கடந்த 20-ம்தேதி கீழ்பெண்ணாத்தூா் சாலை விபத்தில் இவரது சகோதரி மகன் முருகன்(19) என்பவா் சாலை விபத்தில் இறந்து விட்டாா். இதனால் மனஉளச்சலுடன் காணப்பட்ட காா்த்திகேயன் 21-ம்தேதி அன்று தனது வீட்டில் உள்ள மின் விசிரியில் நயிலான் கயிற்றால் தூக்கிலிட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தாா்.

உடனடியாக இவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் புதன்கிழமை உயிரழந்தாா். இது குறித்து இவரது மனைவி ரேணுகாம்பாள் அளித்த புகாரின் பேரில் நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com