தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை சாா்பில், 35-ஆவது சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

செஞ்சி - விழுப்புரம் சாலையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் அருகே இந்தப் பேரணியை செஞ்சி டிஎஸ்பி கவினா கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் முருகவேல் தலைமை வகித்தாா். போக்குவரத்து காவல் ஆய்வாளா் அப்பாண்டைராஜ் முன்னிலை வகித்தாா்.

200-க்கும் மேற்பட்டோா் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்தபடி சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், பொதுமக்களிடம் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினா். விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டிவனம் சாலைகள் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com