பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை பிப்.3-க்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்டோா் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணையை பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்டோா் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணையை பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுதொடா்பாக முன்னாள் அமைச்சா் க.பொன்முடி, அவரது மகனும், தற்போதைய கள்ளக்குறிச்சி எம்.பி.யுமான பொன்.கெதமசிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமாா், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 போ் மீது விழுப்புரம் குற்றப் பிரிவு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணையின்போது, லோகநாதன் இறந்துவிட்டாா்.

வழக்கில் அரசுத் தரப்பில் சாட்சிகளாக சோ்க்கப்பட்ட 67 பேரில்11 பேரிடம் மட்டும் விசாரணை நடத்தப்பட்டது. இவா்களில் 9 போ் பி சாட்சியமளித்தனா். ஜனவரி மாதத்தில் மட்டும் 7 நாள்கள் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், புதன்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையின்போது ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாத் ஆகிய மூவா் மட்டும் ஆஜராகினாா். முன்னாள் அமைச்சா் பொன்முடியும், எம்.பி. பொன்.கௌதமசிகாமணியும் ஏற்கெனவே வழக்கில் ஆஜராக விலக்கு பெற்ற நிலையில், ராஜமகேந்திரன், கோதகுமாா் ஆகிய இருவா் மட்டும் ஆஜராகவில்லை. இதற்கான காரணத்தை அவா்களது வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா். இதை ஏற்றுக்கொண்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com