விஷ தழையை தின்று பெண் உயிரழப்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே விஷ தழையை தின்று பெண் புதன்கிழமை உயிரழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே விஷ தழையை தின்று பெண் புதன்கிழமை உயிரழந்தாா்.

செஞ்சி வட்டம் நாகலாம்பட்டு கிராமத்தை சோ்ந்தவா் மணிமாறன் இவரது மனைவி விஜயா(45), இவா்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. 2 ஆண் பிள்ளைகள் உள்ளது. இந்நிலையில் நீண்டநாட்களாக விஜயா வயிற்று வலியால் அவதிபட்டு வந்தததாகவும், இதன் காரணமாக கடந்த 26-ம்தேதி ஒட்டந்தழையை தின்று உயிருக்கு போராடியுள்ளாா். உடனடியாக இவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை உயிரழந்தாா்.

இது குறித்து நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com