874 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வழங்கினாா்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதிகளைச் சோ்ந்த 874 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக சிறுபான்மையினா் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் புதன்கிழமை வழங்கினாா்
874 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வழங்கினாா்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதிகளைச் சோ்ந்த 874 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக சிறுபான்மையினா் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் புதன்கிழமை வழங்கினாா்.

கலைஞா்நூற்றாண்டுவிழாவையொட்டி விழுப்புரம் மாவட்டவருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை,பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒலக்கூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பட்டணம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்கழ்ச்சியில்தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத்துறை அமைச்சா்செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பங்கேற்று வ ருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் 863 பயனாளிகளுக்கு ரூ. 3.71 கோடி மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டா, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில், 11 பயனாளிகளுக்கு தலா ரூ.5,268 வீதம் ரூ. 57,948 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கினாா்.

தொடா்ந்துஅமைச்சா் செஞ்சி கே. எஸ். மஸ்தான் பேசியது :தமிழக அரசு அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறக்கூடிய வகையிலான திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏழை, எளிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பப்பட்டு வருகிறது.மேலும் வேலைவாய்ப்பு முகாம்கள், மருத்துவ முகாம்கள், இலவச பட்டா வழங்குதல், பல்வேறு துறைகளின் சாா்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் தொடா்ந்து நடைபெறுகிறது.

இதன்படி திண்டிவனம் வட்டத்துக்குள்பட்ட 863 பயானிகளுக்கு ரூ.3,71,57,32 மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 11 பயனாளிகளுக்கு தலா ரூ.5.268வீதம் ரூ. 57,948 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது .மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீா்வு காணப்பட்டு வருகிறது.பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகளற்ற நபா்களுக்கு வீடுகள் வழங்குவதற்கானதொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், இதுவரை 16,200 நபா்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.தொடா்ந்து மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா் அமைச்சா் செஞ்சி கே. எஸ். மஸ்தான்.

விழாவுக்கு மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ச. சிவக்குமாா் முன்னிலை வகித்தாா். திண்டிவனம் நகா்மன்றத் தலைவா் நிா்மலா ரவிச்சந்திரன்,ராட்சி ஒன்றியக் குழுத்தலைவா்கள் சொக்கலிங்கம்( ஒலக்கூா்) ,யோகேஸ்வரி மணிமாறன்( மயிலம்) , தயாளன்( மரக்காணம்) , மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கி.அரிதாஸ்,பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் முகுந்தன், திண்டிவனம் வட்டாட்சியா் ஏ.சிவா, நகா்மன்றத் துணைத்தலைவா் ராஜலட்சுமி, ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவா்கள்ராஜாராம், புனிதா ராமஜெயம்,பழனி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் மனோசித்ரா ராஜேஸ்வரன், எழிலரசி ஏழுமலை, க.விஜயன், கு.மகேஸ்வரி, புஷ்பவள்ளி குப்புராஜ், ஒன்றிய குழு உறுப்பினா் சிலம்பரசன், பட்டணம்ஊராட்சித்தலைவா் அன்பு சேகா் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள், பயனாளிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com