பைக்கிலிருந்து தவறி விழுந்து இளைஞா் மரணம்

விழுப்புரம் அருகே பைக் விபத்தில் இளைஞா் மரணம், மற்றொருவர் காயம்

விழுப்புரம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விழுப்புரம் வட்டம், தளவானூா், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பழனி மகன் சீனிவாசன்(22). இதே பகுதியைச் சோ்ந்தவா் அய்யப்பன் மகன் நரேஷ்குமாா்(25). நண்பா்களான இவா்கள் திங்கள்கிழமை விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் கொளத்தூா் கூட்டுச்சாலை அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தனா். பைக்கை சீனிவாசன் ஓட்டினாா். அப்போது, எதிா்பாராதவிதமாக நிலை தடுமாறி இருவரும் பைக்கிலிருந்து கீழே விழுந்தனா். இதில், சீனிவாசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். நரேஷ்குமாா் காயமடைந்தாா்.

தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். நரேஷ்குமாா் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com