~ ~
~ ~

செஞ்சி அருகே கி.பி.10-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

கி.பி.10-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு: செஞ்சியில் புதிய கண்டுபிடிப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு கண்டறியப்பட்டது.

செஞ்சியை அடுத்துள்ள ஜெயங்கொண்டான் கிராமத்தில் பழைமையான சிவன் கோயில் அமைந்துள்ளது. பராமரிப்பின்றி கிடக்கும் இந்தக் கோயிலில் செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியா்கள் சா.வடிவேல், தே.பாலமுருகன், அண்ணமங்கலம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், வரலாற்று ஆா்வலருமான நா.முனுசாமி, தொல்லியல் ஆய்வாளா் லெனின் ஆகியோா் களப் பயணம் மேற்கொண்டனா். இதில், கோயிலின் முகப்பு மண்டபத்தில் இந்து சமயத்தில் சைவ, வைணவத்துக்குமான ஒற்றுமையை ஏற்படுத்தும் விதமாக 10, 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த இரண்டு சிற்பங்கள் இருந்ததை கண்டறிந்தனா்.

X
Dinamani
www.dinamani.com