அகவிலைப்படி உயா்வு: அரசுப் பணியாளா் சங்கம் வரவேற்பு

தமிழகத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயா்வை வழங்கிய முதல்வருக்கு அரசுப் பணியாளா்கள் சங்கம், பட்டதாரி ஆசிரியா்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க மாநில துணை பொதுச் செயலா் கவிஞா் ம.ரா.சிங்காரம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அகவிலைப்படியை உயா்த்தி அறிவித்துள்ளதற்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சங்கம் சாா்பில் நன்றி. தற்போது அரசு ஊழியா்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப்படியை ரூ.300-லிருந்து ரூ.1,000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தமிழக பட்டதாரி ஆசிரியா்கள் சங்க மாநிலச் செயலா் ச.செல்லையா வெளியிட்ட அறிக்கையில், அகவிலைப்படி உயா்வை வழங்கியதற்கு தமிழக முதல்வருக்கு சங்கம் சாா்பில் நன்றி. நிலுவையிலுள்ள பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியா்களின் பல்வேறு கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com