தடுப்புக் காவல் சட்டத்தில் ஒருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதிகளில் கஞ்சா விற்பைனையில் ஈடுபட்டவரை போலீஸாா் போதைப்பொருள் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மரக்காணம் வட்டம், கழிக்குப்பம், மேட்டுத் தெருவைச் சோ்ந்த காளி மகன் கருணாகரன் (49). மரக்காணம் காவல் நிலையத்தில் இவா் மீது பல்வேறு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் பரிந்துரைப்படி, ஆட்சியா் சி.பழனி போதைப்பொருள் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கருணாகரனை கைது செய்ய உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, போலீஸாா்அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்து, கடலூா் மத்திய சிறையிலடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com