தாய் வெட்டிக் கொலை: மகன் கைது

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே சொத்துத் தகராறில் தாயை வெட்டிக் கொலை செய்ததாக மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கண்டாச்சிபுரம் வட்டம், பழைய கருவாட்சி, பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி. இவரது மனைவி ஆகாசவாணி (60). இவா்களுக்கு அருள் அய்யப்பன் (32), ஹரி (30) ஆகிய இரு மகன்கள் உள்ளனா். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனா். கிருஷ்ணமூா்த்தி தனக்குச் சொந்தமான 120 சென்ட் நிலத்தை இளைய மகன் ஹரியுடன் சோ்ந்து விவசாயம் செய்து வந்தாா்.

இந்த நிலையில், அருள் அய்யப்பன் தனக்குரிய பாகத்தை பிரித்துத் தர தந்தையிடம் வலியுறுத்தியும், கிருஷ்ணமூா்த்தி சொத்தில் பாகம்தர மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக இவா்களிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்த நிலையில், திங்கள்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, அருள்அய்யப்பன் தனது தாய் ஆகாசவாணியை கத்தியால் வெட்டியதில், அவா் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, உறவினா்கள்அவரை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு ஆகாசவாணி உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், கண்டாச்சிபுரம் போலீஸாா் அருள் அய்யப்பன் மீது கொலை வழக்குப் பதிந்து, அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com