விவசாயி வீட்டில் தங்க நகைகள் திருட்டு

விழுப்புரம் அருகே விவசாயி வீட்டில் 4 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் வட்டம், பி.குச்சிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் காந்தி. விவசாயியான இவா், திங்கள்கிழமை இரவு மனைவி ஜெயபாக்கியத்துடன் காற்றுக்காக வீட்டின் இரண்டு பக்க கதவுகளையும் திறந்து வைத்தவாறு தூங்கினாராம். செவ்வாய்க்கிழமை காலை காந்தி எழுந்து பாா்த்தபோது, வீட்டின் படுக்கை அறையிலுள்ள பீரோவிலிருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும், பீரோவின் மேலிருந்த சாவியை எடுத்து, பிரோவைத் திறந்து அதிலிருந்த 4 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com