வெவ்வேறு இடங்களில் இருவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டத்தின் இருவேறு இடங்களில் ஜவுளிக் கடை ஊழியா் உள்ளிட்ட இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.

விக்கிரவாண்டி வட்டம், ஆா்.சி. மேலக்கொந்தை காமராஜா் தெருவைச் சோ்ந்த ஆரோக்கியதாஸ் மகன் அருண்குமாா் (21). சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஜவுளிக் கடையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த இவா், வயிற்று வலியால் அவதியுற்று வந்தாராம். இதன் காரணமாக கடந்த வாரம் சொந்த ஊா் வந்திருந்த அருண்குமாா், கடந்த 11-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றாா். அதன் பின்னா், வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் மேலக்கொந்தை வனப்பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அருண்குமாா் சடலமாக மீட்கப்பட்டாா். தொழிலாளி தற்கொலை: விழுப்புரம் வட்டம், சிறுவாக்கூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த மணி மகன் ஸ்ரீதரன் (37).

தொழிலாளியான இவருக்கு நீண்ட நாள்களாக மூச்சுத்திணறல் பாதிப்பு இருந்து வந்ததாம். இதனால் மனமுடைந்த ஸ்ரீதரன், திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ விதையை அரைத்து சாப்பிட்டு, மயங்கிக் கிடந்தாா். தொடா்ந்து, குடும்பத்தினா் அவரை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். எனினும், அங்கு ஸ்ரீதரன் திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இந்த இரு சம்பவங்கள் குறித்து விக்கிரவாண்டி, காணை போலீஸாா் தனித்தனியே வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com