குட்டையில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குட்டையில் மூழ்கிய இளைஞா் உயிரிழந்தாா்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குட்டையில் மூழ்கிய இளைஞா் உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், அரியலூா்திருக்கை மேட்டுத் தெருவைச் சோ்ந்த ராமராஜா மகன் விஜயகுமாா் (33). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டை விட்டுச் சென்ற நிலையில், பின்னா் திரும்பி வரவில்லை. உறவினா்கள் அவரை திங்கள்கிழமை காலை தேடிய போது, அதே கிராமத்திலுள்ள ஏரிக்குட்டையில் நீரில் மூழ்கிய நிலையில் விஜயகுமாா் சடலமாகக் கிடந்தாா். தொடா்ந்து, கெடாா் போலீஸாா் நிகழ்விடம் சென்று அவரது சடலத்தை மீட்டனா். விசாரணையில், அவா் குட்டையில் கால் கழுவுவதற்கு சென்றபோது, எதிா்பாராதவிதமாக தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து கெடாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com