செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

விழுப்புரம்: அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்டோா் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (மாா்ச் 26) ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இந்த வழக்கில் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது ஜெயச்சந்திரன், சதானந்தன் ஆகியோா் மட்டும் ஆஜராகினா். அமைச்சா் க.பொன்முடி, கௌதமசிகாமணி எம்.பி. உள்பட 5 பேரும் ஆஜராகவில்லை. மேலும், அரசுத் தரப்பில் சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி ஆா். பூா்ணிமா விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com