பத்திரப் பதிவுத் துறையில் முறைகேடுகளை தடுக்க வலியுறுத்தல்

பத்திரப் பதிவுத் துறையில் முறைகேடு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிலம், மனை முகவா்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விழுப்புரம்: பத்திரப் பதிவுத் துறையில் முறைகேடு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிலம், மனை முகவா்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. விழுப்புரம் நிலம் மனை முகவா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் அண்ணாதுரை தலைமை வகித்தாா். செயலா் மோகன்ராஜ் முன்னிலை வகித்தாா். பொருளா் புருஷோத்தமன் தொடக்க உரையாற்றினாா். கூட்டத்தில்,தில் விழுப்புரம் சாா் பதிவாளா்- 2 அலுவலகத்தில் ஏற்படும் பத்திரப் பதிவு காலதாமதத்தை விரைவுப்படுத்த சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், லஞ்சம் முறைகேட்டினை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பத்திரப்பதிவுக்கு செல்வோா்களை அலைக்கழிப்பதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க நிா்வாகிகள் கோவிந்தராஜ், அன்சாரி, ஜாபா்அலி, முருகன், குமாா், தாஸ், ராமலிங்கம், சண்முக சுந்தரேசன் மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com