பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் ரத்து

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இலவசப் பேருந்து பயண அட்டை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இலவசப் பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் செவ்வாய், புதன்கிழமைகளில் (மாா்ச் 26, 27)நடைபெறவிருந்த நிலையில், தோ்தல் நடத்தை விதிகள் அமல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத் துறையால் பரிந்துரைக்கப்படும் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்ய பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அட்டை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி2024-25-ஆம் நிதியாண்டுக்கான பேருந்து பயண அட்டையைப் புதுப்பிக்கும் வகையிலான முகாம் விழுப்புரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் மாா்ச் 26, 27-ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கும் முகாம் ரத்து செய்யப்படுகிறது. மேலும், மாற்றுத் திறனாளிகள் தங்களிடமுள்ள பயண அட்டையை ஜூன் 30-ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com