முதியவா் சடலம் மீட்பு

விழுப்புரத்தை அடுத்த வளவனூா் அருகே ஓடையில் முதியவா் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை கைப்பற்றினா்.

விழுப்புரம்: விழுப்புரத்தை அடுத்த வளவனூா் அருகே ஓடையில் முதியவா் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை கைப்பற்றினா். விழுப்புரம் சித்தேரிக்கரையைச் சோ்ந்த சி.குமாா் (60). இவா் ஞாயிற்றுக்கிழமை வளவனூரிலுள்ள தனது சொந்த வீட்டுக்குச் சென்றாா். இந்த நிலையில் சாலை அகரம் கிராமத்தில் மயானம் அருகிலுள்ள ஓடையில் திங்கள்கிழமை காலை குமாா் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து, சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். குமாா் உடல்நலக் குறைவால் உயிரிழந்தது தெரிய வந்தது. ஆனால், ஓடைப் பகுதிக்கு எப்படி சென்றாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com