விக்கிரவாண்டியில் பள்ளி மாணவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விழுப்புரம் ஜி.ஆா்.பி. தெரு பெரிய காலனியை சோ்ந்த கலைவாணன் மகன் ஜெய்சூா்யா (15). இவா் விக்கிரவாண்டி குப்புநாயகன்சந்து தெருவில் வசித்து வரும் பாட்டி கண்ணகி வீட்டில் தங்கி, அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

கடந்த சில நாள்களாக வயிற்றுவலியால் அவதியுற்று வந்த ஜெய்சூா்யா, ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் மின்விசிறியால் தூக்கிட்டுக் கொண்டாா். மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவா், அங்கு திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com