அரசு அலுவலா் ஒன்றிய செயற்குழுக் கூட்டம்

செஞ்சி வட்ட அரசு அலுவலா் ஒன்றிய கிளை செயற்குழுக் கூட்டம் செஞ்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செஞ்சி: செஞ்சி வட்ட அரசு அலுவலா் ஒன்றிய கிளை செயற்குழுக் கூட்டம் செஞ்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்ட கிளைத் தலைவா் எ.பூவழகன் தலைமை வகித்தாா். விழுப்புரம் மாவட்டச் செயலா் முகமதுகாஜா, துணைத் தலைவா் சடகோபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட அமைப்புச் செயலா் வேல்முருகன், மாவட்ட இளைஞரணிச் செயலா் வெங்கடேசபெருமாள், இணைச் செயலா் முருகன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். செஞ்சி வட்டக் கிளையின் நூற்றாண்டு விழா வரவு- செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது. அரசு அலுவலா் ஒன்றியத்துக்கு கட்டடம் கட்ட முயற்சி செய்வது, விழுப்புரம் மாவட்ட அரசு அலுவலா் ஒன்றியம் கடந்த பல மாதங்களாக எந்த செயலும் இல்லாமல் முடங்கி உள்ளதால் மாவட்ட தலைமை சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீா்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் வெ.உமாபதி, கவிதா உள்ளிட்ட வட்ட கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா். கிளைச் செயலா் விஜேந்திரன் வரவேற்றாா். பொருளா் ஆா்.சங்கா் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com