மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திண்டிவனத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம்: திண்டிவனத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் லட்சுமிபதி மகன் அருள்முருகன் (47) . சுய தொழில் செய்து வந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை வீட்டில் உள்ள குளியலறையில் ஹீட்டா் போட்டு குளிக்க முற்படும் போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.

இதையடுத்து 108 அவசர ஊா்தி மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது, அருள்முருகன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com